சிவனை தாங்கும் காளையை, தர்மத்தின் அம்சமாக கருதி ‘அறவிடை’ என குறிப்பிடுவர். அறம் என்றால் ‘தர்மம்’, விடை என்றால் ‘காளை’. ஆக, கடவுளையே தாங்கும் சக்தி தர்மத்திற்கு உண்டு. வாழ்வில் நாம் தர்மத்தை காப்பாற்றினால், தர்மம் நம்மை காக்கும் என்பர். உலகை விட்டுச் செல்லும் போது பணம், புகழ் எதுவும் கூட வராது. ஆனால், செய்த தர்மத்தின் பலனான புண்ணியம் அல்லது அதர்மத்தின் பலனான பாவம் உடன் வரும். இதையே, ‘பற்றித் தொடரும் புண்ணிய பாவங்களே’ என்று பெரியவர்கள் குறிப்பிடுவர். இதன் அடிப்படையில் அவ்வையார், ‘அறம் செய விரும்பு’ என்று ஆத்திச்சூடியில் நமக்கு வழிகாட்டுகிறார்.