கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டியில், பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து யாத்திரையை துவக்கினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் பஞ்., வேங்காம்பட்டியில், ஏராளமான பக்தர்கள், ஆண்டுதோறும் பழநி பாத யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு, பக்தர்கள் திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் குடம் எடுத்து வந்தனர். வேங்காம்பட்டி விநாயகர், முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் பழநி கோவிலுக்கு பாத யாத்திரை புறப்பட்டனர். இதில், அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.