பெருந்துறை: பெருந்துறை அடுத்த, கராண்டி பாளையம், காட்டுவலசு கிராமத்தில், சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலை, வேள்வி பூஜைகளை தொடர்ந்து, கார்த்திகேய குருக்கள் தலைமையில், கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா நடந்தது. சுற்று வட்டார பகுதி மக்கள், திரளாக கலந்து கொண்டனர்.