பதிவு செய்த நாள்
27
மார்
2018
02:03
ஆர்.கே.பேட்டை: கமல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், ஏப்., 5ம் தேதி காலை நடைபெற உள்ளது. பொதட்டூர்பேட்டை அடுத்த, சவுட்டூர் கிராமத்தில் உள்ளது, கமல விநாயகர் கோவில். இந்த கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்து, ஏப்., 5ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏப்., 5ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, விநாயகர் சிலைக்கு கும்பாபிஷேகமும், அதை தொ டர்ந்து அனுமன் சிலை பிரதிஷ்டையும் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு, பக்தி பஜனையும், 7:00 மணிக்கு, ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். இரவு, 10:00 மணிக்கு, பக்தி நாடகம் நடத்தப்பட உள்ளது.