பதிவு செய்த நாள்
27
மார்
2018
02:03
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: ராவுத்தன்குப்பம் கிராமத்தில், எல்லையம்மன், ராஜகணபதி, அய்யனாரப்பன் ஆகிய மூன்று கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த ராவுத்தன்குப்பம் கிராமத்தில் ராஜகணபதி, எல்லையம்மன், அய்யனாரப்பன் கோவில்கள் புதியதாக கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி காலை, நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலையில், முதல்கால யாகபூஜை, மூல மந்திர ஹோமம் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி, காலை 9:45 மணிக்கு, ராஜகணபதிக்கும், புஷ்கலா சமேத அய்யனாராப்பனுக்கும், காலை 10:00 மணிக்கு, எல்லையம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் மகா அபஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு, எல்லையம்மன் வீதியுலாவும் நடந்தது. ராவுத்தன்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.