Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி உத்திர விரத முறை! பங்குனி உத்திரத்தில் தெய்வத்தின் திருமணங்கள்! பங்குனி உத்திரத்தில் தெய்வத்தின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரத்தில் காவடி எடுப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திரத்தில் காவடி எடுப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

29 மார்
2018
05:03

பங்குனி உத்திரம் என்றாலே காவடி வழிபாடுதான் நினைவுக்கு வரும். முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பதைப் பற்றி ஒரு  புராணக்கதை உண்டு. அகத்தியர் கந்தகிரியில் - சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைகளைச் சிவ - சக்தியராகக் கருதி பூஜித்து வந்தார்.  அவற்றை அவர் பொதிகை மலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு முருகப் பெருமானின் அனுமதிபெற்று, அந்த மலைகளை எடுத்து  வருமாறு இடும்பன் என்பவனைப் பணித்தார். இடும்பன் தன் மனைவி இடும்பியின் துணையுடன் பூர்ச்சவனத்தை அடைந்தான். அங்கு  பிரம்மதண்டமும் அஷ்ட நாகங்களும் அவனிடம் வந்தன.

அஷ்ட நாகங்களால் உறிகளைச் செய்து, பிரம்ம தண்டத்தில் கோத்து இடும்பன் ஒரு காவடியைக் கட்டினான். மூலமந்திரத்தை  உச்சரித்தபடியே அவன் மலைகளை எடுத்துக் காவடியில் வைத்தான். சுமந்து வரலானான். இடும்பன் திருவாவினன் குடிக்கு (பழநி)  வந்தபோது மலைகள் மிகவும் கனத்தன. அதனால் காவடியைக் கீழே இறக்கினான். இளைப்பாறினான். இடும்பி கொடுத்த உணவுகளை  உண்டான். மீண்டும் காவடியைத் தூக்க முனைந்தான். முடியவில்லை. அப்போது சிவகிரியில், குராமரத்தடியில் குமரன் நிற்பதை  கண்டான். மலைகள் எடுக்க முடியாதபடி அவை கனப்பதற்குக் காரணம் அந்தச் சிறுவனே என்று இடும்பன் கருதி, அவனுடன்  போரிட்டான், மாண்டான்.

இடும்பி அழுதும், தொழுதும் குமரனிடம் வேண்டினாள். முருகன் அருளால் இடும்பன் மீண்டும் உயிர் பெற்று எழுந்தான். முருகனை  வணங்கி நின்றான். சிவகிரி, சக்திகிரிகளைக் காவடியில் சுமந்து வந்து முருகனது அருளைப் பெற்றான் இடும்பன். இவனைப் போல  காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கும் அருள் தருவதாக அருளினான் முருகன். அதனால்தான் பக்தர்கள் முருகனருளை வேண்டி பங்குனி  உத்திரத்தன்று பலவித காவடிகளை பக்தியுடன் ஏந்தி வந்து வழிபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar