திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. திருவிழாவின் 14ம் நாள் நிகழ்ச்சியாக நடந்த தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5:30 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகங்கள் நடந்தது. சிவப்பு, பச்சை பட்டால் பரிவட்டம் கட்டி கோயில் முன் நிலை நிறுத்தப்பட்டிருந்த பெரிய வைரத் தேரில் எழுந்தருளினர். கோயிலில் கருப்பண சுவாமிக்கு பூஜை முடிந்து, தேர் சக்கரங்களில் தேங்காய் உடைக்கப்பட்டது. சிவாச்சார்யார் சுவாமிநாதன், தேரில் எறி வெள்ளை வீசியதும், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை 6:23 மணிக்கு நிலையிலிருந்து புறப்பட்ட தேர், ஐந்து மணிநேரம் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி ஆசைந்து காலை11:28 மணிக்கு நிலைக்கு வந்தது. இரவு சுவாமி தங்க மயில் வாகனத்தில் அருள்பாலித்தார். இன்று (ஏப்., 4)தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.