அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி,கொடியானது நாடார் உறவின்முறை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்ய , இரவு 10:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 15 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஏற்பாடுகளை, அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.