பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
11:04
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தீர்த்த உற்ஸவம் நடந்தது. இக்கோயிலில் மார்ச் 21 கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா அருள்பாலித்தார். தீர்த்த உற்ஸவத்தையொட்டி நேற்று காலை உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தர தேவர் எழுந்தருளினர். மார்ச் 21 முதல் நடந்த யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, புனிதநீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. உச்சிகால பூஜைக்குப்பின், மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தர தேவர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். சிறப்பு பூஜை முடிந்து சிவாச்சார்யார்களால் சரவணப் பொய்கைக்கு அஸ்தர தேவர் கொண்டு செல்லப்பட்டு, திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது.