Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல்அபிராமி அம்மன் கோயிலில் ... சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புஷ்பாஞ்சலி சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
11:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பக்தர்கள் பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, சித்திரை மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:45 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்திருந்ததால், பொது வழியில், ௨ மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர். இதே போல், திருத்தணி, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் மற்றும் அருங்குளம் கூட்டுச் சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் ஆகிய கோவில்களில், கிருத்திகை விழாவையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மாலையில், வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar