குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2018 02:04
வாடிப்பட்டி, வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்12 ம் நாள் நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. தாசில்தார் பார்த்திபன், சமயநல்லுார் டி.எஸ்.பி மோகன்குமார் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(ஏப்.,28) மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
சோழவந்தான்: பிரளயநாதர் கோயில்,திருவேடகம் ஏடகநாதர் கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோயில் மன்னாடிமங்கலம், திருவாலவாயநல்லுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் திருக்கல்யாணம் நடந்தது. திருநகர் விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் சோமாஸ்கந்தர், விசாலாட்சிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
திருமங்கலம்: இங்குள்ள பழமை வாய்ந்த மீனாட்சி - சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. முன்பு மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு இங்கிருந்து தான் திருமாங்கல்யம் கொண்டு செல்லப்பட்டதாகவும், இதனால் இந்த நகரின் பெயர் திருமங்கலம் எனப்பெயர் பெற்றதாகவும் மக்கள் கூறுகின்றனர்.