பதிவு செய்த நாள்
28
ஏப்
2018
02:04
கொடைக்கானல், கொடைக்கானல்ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில், சங்கரலிங்கேஸ்வரர்- கோமதாம்பிகை திருக்கல்யாணம்நேற்று நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவங்கின.காலை 6:15 மணி முதல் 7:15 வரை தேவதா அனுக்ஜை,கணபதி ஹோமம், மாப்பிள்ளை, பெண் வீட்டர் அழைப்பு, ரக் ஷா பந்தனம் நடந்தது. பின்னர் விவாக சங்கல்பம்,கன்னிகா தானம், திருமாங்கல்ய தாரணம், பாணி கிரகணம் நடந்தது. பின், விஷேச தீபாராதனை, திருக்கல்யாண விருந்து நடந்தது.
மாலையில் திருக்கல்யாண தம்பதியர் சங்கரலிங்கேஸ்வர்- கோமதாம்பிகைவீதி உலா நடந்தது. பட்டிவீரன்பட்டி: சித்தரேவு பெருமாள் கோயிலில் நேற்று பகல் 12:00 மணிக்கு வரதராஜப் பெருமாள், பூமாதேவிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஊர்பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று புதிய மாங்கல்யம் மாற்றிக்கொண்டனர். ஏற்பாடுகளை தக்கார் கணபதி முருகன், நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் செய்திருந்தனர். முன்னதாக பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் அர்ச்சகர் சேஷன் தலைமையில் குழுவினர் கல்யாணத்தை நடத்தினர். சின்னாளபட்டி: ராமஅழகர் கோயில் சித்திரை திருவிழாவில், கீழக்கோட்டையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, பொன்விழா மண்டபத்தில், சுவாமிக்கு 16 வகை அபிேஷகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, விசேஷ யாகசாலை பூஜைகள், சிறப்பு ஆராதனைகளுடன், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றி, வழிபட்டனர். ஆத்துார் எம்.எல்.ஏ., பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.