பதிவு செய்த நாள்
05
மே
2018
05:05
போடி: தென்காசியம்பதி என போற்றப்படும் போடியில் சகல சவுபாக்கியங்களையும் அள்ளித்தரும் வகையில் பஸ் ஸ்டாண்ட் அருகே நகரின் மையப்பகுதியான ஆர்.ஐ., ஆபீஸ் ரோட்டில் அமைந்துள்ளது மது காமாட்சியம்மன் கோயில். முப்பதி இரண்டு ஆண்டுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற கோயிலான இது, வடக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். மூலஸ்தானத்தில் காமாட்சியம்மனும், எதிரே நந்தியும், வலது புறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் உள்ளனர். காமாட்சி அம்மனை மனமூவந்து வணங்கினால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலை வாய்ப்பு, வாழ்க்கையில் அமைதி ஏற்பட்டு தொழில் விருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை. இதை பலரும் உணர்ந்துள்ளனர். தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி கிழமையில் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். ஆடி வெள்ளி, தை வெள்ளிக் கிழமைகளில் வரலட்சுமி பூஜையும், மார்கழியில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. மாசி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். ஏராளமானோர் தரிசனம் செய்கின்றனர். அம்மன் அலங்காரம், பூஜைகளை பூஜாரி ஆர்.ஜி. பொன்ராம் செய்து வருகிறார். கோயில் குறித்த மேல் விபரங்களை தலைவர் பி. பால்பாண்டியிடம் 94873 54059 என்ற அலைபேசியில் தெரிந்து கொள்ளலாம்.