பதிவு செய்த நாள்
11
மே
2018
12:05
காஞ்சிபுரம்:குமரகோட்டம் கோவில் உண்டியலில், 12.52 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் முருகன் கோவிலில், செவ்வாய், கிருத்திகை, சஷ்டி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. கடைசியாக, கடந்த ஜனவரியில் எண்ணப்பட்டது. அதன்பின், நேற்று உண்டியல் திறக்கப்பட்டடது.காஞ்சிபுரம் உதவி ஆணையர், மு.விஜயன், செயல் அலுவலர், ந.தியாகராஜன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 12.53 லட்சம் ரூபாயும், 35 கிராம் தங்கமும், 462 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.