பதிவு செய்த நாள்
15
மே
2018
12:05
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அர்ச்சுனன் தபசு நாடகம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேப்பள்ளி பஞ்., முருக்கம்பள்ளம் கிராமத்தில் உள்ள, திரவுபதி அம்மன் கோவில், 44வது ஆண்டு, மகாபாரத விழா, கடந்த, 4ல் திரவுபதி அம்மனுக்கு அபி?ஷக ஆராதனையுடன் துவங்கியது. தினமும், மதியம், 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 18 நாட்கள் மகாபாரத சொற்பொழிவும், ஆறு முதல் தொடர்ந்து, 13 நாட்கள் இரவு, 9:00 மணிக்கு மகாபாரத தெருக்கூத்து நாடகங்களும் நடந்து வருகின்றன. நேற்று காலை, 10:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நாடகம் நடந்தது. இதைக்காண, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.