சின்னாளபட்டி: சஷ்டியை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியசுவாமி, சதுர்முக முருகனுக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது.