பதிவு செய்த நாள்
08
ஜூன்
2018
11:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐந்து இடங்களில், அணையா தீபம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் கூறினார். இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீ விபத்தை தடுக்க, 11.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில், வெளிப்புறமாக செல்லும் மின் ஒயர்களை, தரை வழியாக கொண்டு செல்ல, 44 லட்சம் ரூபாய் மதிப்பில், திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இரு திட்ட அறிக்கையும், அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவிலில், முக்கிய இடங்களில், ஐந்து அணையா விளக்குகள் வைக்கப்படவுள்ளன. தீபமேற்ற நினைக்கும் பக்தர்கள், நெய்யை ஊற்றி செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.