ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், பாகாசூரன் கும்பம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில், இன்று இரவு அலகு பானை ஊர்வலம் நடைபெற உள்ளது.தீர்த்தவாரி குளக்கரையில் இருந்து இரவு, 7:00 மணிக்கு புறப்படும் ஊர்வலத்தில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ள திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இரவு, 8:00 மணிக்கு, அலகு பானை கோவில் கருவறையில் நிலைநிறுத்தப்படும்.