சேலம்: சேலம், கோட்டை, மாரியம்மன் கோவில் உண்டியல்கள், கடந்த ஜன., 18ல் திறக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு பின், செயல் அலுவலர் மாலா தலைமையில், நேற்று, உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில், 13 லட்சத்து, 24 ஆயிரத்து, 379 ரூபாய், 222 கிராம் தங்கம், 338 கிராம் வெள்ளி இருந்தது. இது, கோவில் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்படுமென, மாலா தெரிவித்தார்.