சாயல்குடி;கடலாடி அருகே ஆ. புனவாசல் அய்யனார், ஏகநாதர் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. கடந்த ஜூன் 18ல் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. கிராமத்தின் சார்பில் நேர்த்திக்கடன் மண்குதிரை செய்ய கடந்த மாதம் கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது, அங்கு தயார் செய்யப்பட்ட குதிரை மற்றும் தவளும் பிள்ளை, காவல் தெய்வங்கள் உருவத்தை கிராம மக்கள் காத்தனேந்தல், பறையங்குளம், ஆப்பனுர் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து புனவாசலில் வைத்து வழிபட்டனர். பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு கிராம எல்லையிலுள்ள அய்யனார் கோயிலில் நேர்த்திக்கடன் பொம்மைகள் வைக்கப்பட்டன.