பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
12:07
தலைவாசல்: ஆனி திருவிழாவை முன்னிட்டு, தலைவாசல், ராமசேஷபுரம், மாரியம்மன் கோவிலில், அய்யனார், மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கும் விழா, நேற்று நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து, மாரியம்மனை சுமந்து சென்ற பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். மாலை, சிறப்பு பூஜை நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டுதலுடன், விழா நிறைவடைகிறது.