பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
12:07
மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள திருவரங்கம் கோவிலில், தே.மு.தி.க., சார்பில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பூர்ண நலம் பெறவேண்டி, ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நேற்று குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சியை, தே.மு.தி.க.,வினர் நடத்தினர். மாவட்ட துணைச்செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய செயலாளர் அஞ்சாமணி முன்னிலை வகித்தார். இப்பகுதி பெண்கள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வசந்தா, நிர்வாகிகள் பரமசிவம்,கருணாகரன், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர் காமராஜ், மும்மூர்த்தி, ராமச்சந்திரன், நகர செயலாளர் ஜம்ஷீத்பஷீர், ரிஷிவந்தியம் அவைத்தலைவர் கோதண்டபாணி மற்றும் முருகன், சரவணன், மஞ்சுநாதன், சக்தி கலந்துக் கொண்டனர்.