கரூர்: கரூர் சக்கரத்தாழ்வார் கோவிலில், 12வது கும்பி?ஷக தின விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் தினசரி மார்க்கெட் அருகே, பிரசித்தி பெற்ற சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன் தினம் காலை, 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன், கும்பாபிஷேக ஆண்டு விழா துவங்கியது. நேற்று காலை, 9:15 மணிக்கு கலச புனர்பூஜை, 10:00 மணிக்கு, பல திரவியங்களால் அபிஷேகம், 12:30 மணிக்கு மஹா தீபராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.