சின்னமனுார் : தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ஆடி சனிவாரத் திருவிழா ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து 5 வாரங்கள் நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து தலைமையில், உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபி, முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆக. 3ல் சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு நடக்கும் லட்சார்ச்சனையில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். நேரில் வரமுடியாதவர்கள் பெயரில் அர்ச்சனை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.