மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராய மண்டப கடைகளில் கடந்த பிப்.,2ல் தீப்பிடித்தது. இதனால் கோயில் கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கில் அம்மன் சன்னதியில் 51 கடைகளை மட்டும் டிச.,31 வரை திறக்க உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்தது. கோயில் கடைக்காரர்கள் சங்க தலைவர் ராஜூநாகுலு கூறியதாவது: கோயிலில் மொத்தம் 115 கடைகள் உள்ளன. அதில், அம்மன் சன்னதியில் உள்ள 51 கடைகளை திறக்க அனுமதி கிடைத்துள்ளது. வாடகை நிலுவை வைத்திருக்கும் கடைக்காரர்கள் முழுமையாக செலுத்தவும், நிலுவை இல்லாதவர்கள் ஒரு மாத வாடகையை முன்கூட்டி செலுத்தவும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது. கோயில் நிர்வாகம் வாடகை குறித்து கணக்கிட்டு வருவதால் கடை திறப்பு தாமதமாகிறது. டிச.,31க்கு பின் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் மாற்று இடம் கேட்டுள்ளோம், என்றார்.இந்நிலையில் நேற்று மாலை முதல் கடைகள் திறக்கப்பட்டன.