பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
02:07
கிருஷ்ணகிரி: ஆடி மாதம் பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள மாரியம்மன் கோவில்களில், தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில், கடந்த, 21ல் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அம்மனை தொட்டிலில் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அம்மனுக்கு கூழ் படைத்து பக்தர்களுக்கு வழங்கினர். இன்று காலை, அம்மனுக்கு அலங்காரமும், மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.