பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
02:07
திருவள்ளூர் : திருவள்ளூர், ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், குரு பூர்ணிமா மற்றும் எட்டாம் ஆண்டு துவக்க சம்வஸ்திர விழா, இன்று துவங்குகிறது. திருவள்ளூர், பெருமாள் செட்டி தெரு, ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், குரு பூர்ணிமா மற்றும் எட்டாம் ஆண்டு துவக்க சம்வஸ்திர விழா, இன்று துவங்கி வரும், 29ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், ஆனந்த சாய் ராமிற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும், பஜனைகளும் நடைபெறவுள்ளன. இன்று மாலை, 4:00 மணிக்கு, பக்தர்கள் வழங்கும் மல்லிகை புஷ்ப சரங்களுடன் சிறப்பு புஷ்ப அலங்காரமும், இரவு, 7:15 மணிக்கு, சத்குரு சாய்நாதர் சிறப்பு பஜனையும் நடைபெறுகிறது. நாளை காலை, 5:30 மணிக்கு, வேம்புலி அம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் துவங்கி காலை, 7.30 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வரும், 27ம் தேதி காலை, 6:00 மணிக்கு மகா கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி, மேதா தட்சிணாமூர்த்தி, தத்தாத்ரேயர் மற்றும் சாய்நாதர் ஹோமம் நடைபெறுகிறது. சம்வஸ்திர அபிஷேகத்தை முன்னிட்டு, அன்று காலை, 8:00 மணிக்கு சங்காபிஷேகம் நடைபெறுகிறது.