தேனி :தேனி நகர இந்து முன்னணி சார்பில், விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் பாரத மாதா பூஜை தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் ராமராஜ் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் கோம்பை கணேசன் பூஜையை துவக்கி வைத்தார். நகர பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.