நெல்லிக்குப்பம் :நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளும், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை சுந்தர விநாயகர், பாலமுருகன், பிரம்மா, விஷ்ணு, தட்சணாமூர்த்தி, துர்க்கை, இடும்பன், நவகிரகம், ஹனுமான், பரிவார மூர்த்திகள் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடந்தது. நடராஜ சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் செய்தனர். தலைவர் குப்புசாமி மற்றும் திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.