முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2012 11:01
வள்ளியூர் : முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வள்ளியூர் அருகேயுள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்று விழா அன்று காலை ஜெபமாலை, திருப்பலி நடந்தது. மாலை ஆலய கொடியை நான்குநேரி பங்குதந்தை ஜான்பிரிட்டோ ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஆலய மேலாளர் சிலுவை செபஸ்தியான், கணக்கர் ஞானசேகர் மற்றும் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பிப்.6ம் தேதி 9ம் திருவிழா அன்று காலை பங்குதந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் ஜெபமாலை திருப்பலியும், இரவு சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும் நடக்கிறது. நள்ளிரவு புனிதர் செபஸ்தியாரின் தேர்பவனி நடக்கிறது. 10ம் திருவிழா அன்று அதிகாலை திருவிழா கூட்டு திருப்பலி ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் நடைபெறுகிறது.