விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2012 11:01
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் ஆண்டு தோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 26ம் தேதி பக்தர்கள் மாலை அணிந்தனர். நேற்று விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து மண்சோறு சாப்பிட்டு வழிபட்டனர். வரும் 2ம் தேதி இருமுடி கட்டி 3ம் தேதி ரயில் மூலம் சமயபுரம் கோவிலுக்குச் செல்கின்றனர். பாதயாத்திரை நலச்சங்க செயலர் ஜெயக்குமார் உட்பட நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.