பவானிசாகர்: பவானிசாகர் அடுத்த கொத்தமங்கலத்தில், பழமை வாய்ந்த சொர்ண விநாயகர் - கருமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. முன்னதாக, விநாயகர் வழிபாட்டுடன், கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. கணபதி யாகம் மற்றும் யாகசாலை பூஜைகள் செய்து, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூலவர் கருமாரியம்மனுக்கு தீபாராதனை நடந்தது.