இடைப்பாடியில் ஆடிப்பூரம் விழா: பால்குடம் எடுத்து வந்த பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2018 02:08
இடைப்பாடி: இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள மாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திரளான பெண்கள் பால்குடம் ஊர்வலம் சென்றனர். இடைப்பாடி, கவுண்டம்பட்டி செல்லியாண்டி அம்மன் கோவில் பகுதியில் இருந்து, மாரியம்மன் கோவில் வரை, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், அவர்கள் கொண்டு வந்த பசும்பாலை கொண்டு, மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர்தலைவர் மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல், கவுண்டம்பட்டி புதியதெரு பகுதியில், சின்னமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. ஊர்கவுண்டர் முருகையன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.