பதிவு செய்த நாள்
31
ஜன
2012
11:01
சுரண்டை : மேலக்கலங்கல் திருவேங்கடபோத்தி அய்யனார் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மேலக்கலங்கல் திருவேங்கடபோத்தி அய்யனார் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பரிவார மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம், பிம்பசுத்தி, நான்காம் யாகசாலை பூஜை, ஸ்பர்சாகுதி, நாடிசந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் எழுந்தருளல் மற்றும் திருவேங்கடபோத்தி அய்யனார் பரிவார மூர்த்திகள், விமான கோபுரம் ஆகியவற்றிற்கு காலை 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விசேஷ அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலங்குளம் யூனியன் சேர்மன் எப்சி மரக்கன்று நட்டு வைத்தார். விழாவில் சுரண்டை தொழிலதிபர் எஸ்.வி.கணேசன், கோயில் நாட்டாண்மை அரிராமச்சந்திரன், ஊர் நாட்டாண்மை செந்தில்குமார், டி.கே.எம். எம்ஜிஆர் நகர் பாண்டியன், மேலக்கலங்கல் பஞ்., தலைவர் சரவணவேல் முருகையா, செந்தில், சரவணன் மற்றும் மேலக்கலங்கல், கீழக்கலங்கல், பலபத்திரராமபுரம், வடுகுபட்டி, கருத்தானூர், ராஜபாளையம், தஞ்சாவூர், கோடிராமகிருஷ்ணாபுரம், மாவலியூத்து, தென்காசி, காசிதர்மம், வீரசிகாமணி, சுரண்டை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.