விருத்தாசலம் : விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி சாலை யில் உள்ள வேடப்பர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 28ம் தேதி முதல் வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் 9 மணிக்கு மேல் கலசம் புறப்பட்டு வேடப்பர் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தீயணைப்புத் துறை வாகனம் மூலம் பக்தர்களுக்கு கும்பாபிஷேக தண்ணீர் தெளிக்கப்பட்டது. நகர மன்ற தலைவர் அரங்கநாதன், துணைத் தலைவர் சேர்மன் சந்திரகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தைதமிழரசன், முன்னாள் சேர்மன் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.