திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பரனுார் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷகம் நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த பரனுார்மலை அருகில் பழமையான செல்லியம்மன் மற்றும் அய்யனாரப்பன் காவல் தெய்வங்களின் கோவில் உள்ளது. இவை புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 20ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 5:00 மணிக்கு‚ நான்காம் கால யாகசாலை பூஜை‚ நாடிசந்தானம்‚ தத்வார்சனை‚ பூர்ணாகுதி‚ கடம் புறப்பாடாகி கிருஷ்ணபிரேமி சுவாமிகள் தலைமையில் 7:00 மணிக்கு விமான‚ மூலஸ்தானங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு‚ செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கல்‚ மகா தீபாராதனை‚ அய்யனாரப்பன் குதிரை வாகனத்திலும்‚ அம்மன் காமதேனு வாகனத்திலும் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.