பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
ஈரோடு: சிவகிரி, சாணார்பாளையம் ஆதி விநாயகர், பகவதி அம்மன், மாகாளி அம்மன், குழியங்காடு கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் ஃபிப்., 6ல் நடக்கிறது. பிப்., 3ம் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, 4ம் தேதி காலை 7.30 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், காலை 10.30 மணிக்கு காவிரி புனிதநீர் எடுத்து வருதல், மாலை 5.30 மணிக்கு தீர்த்தம் முளைப்பாரி அழைத்து வருதல், இரவு 9.30 மணிக்கு மாகாளி அம்மன் யந்திரம் வைத்து பிரதிஷ்டை செய்தல் நடக்கிறது. ஃபிப்., 5ல் மங்கள இசை, அஸ்திர ஹோமம், இரண்டாம் கால யாக வேள்வி துவக்கம், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி துவக்கம், அஷ்டலட்சுமி பூஜை, பூர்ணஹூதி தீபாராதனை நடக்கிறது. ஃபிப்., 6ல் காலை 6 மணிக்கு மங்கள இசை, காலை 7.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. காலை 9 முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7 முதல் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.