பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
ஆழ்வார்குறிச்சி:கடையம் முப்புடாதியம்மன், கீழக்கடையம் பத்திரகாளியம்மன் கோயில்களில் கொடைவிழா துவங்கியது. கடையம் வடக்கு ரதவீதியில் முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. கீழக்கடையத்தில் பத்திரகாளியம்மன் உற்சவ கோவிலும் உள்ளது. பத்திரகாளியம்மன் மூலக்கோயில் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்மன் கோயில் உள்ளது. இந்த இரு கோயில்களிலும் கடந்த 24ம் தேதி கொடை விழா கால்நாட்டுதல் வைபவம் நடந்தது.தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. முப்புடாதி அம்மன் கோயிலில் நேற்று காலை முதல் திருநாள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் பால்குடம், தீச்சட்டி ஊர்வலம், பூந்தட்டு ஊர்வலம் பின்னர் அம்பாளுக்கு பால்குட அபிஷேகம், சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மாலையில் மாவிளக்கு, மாவிளக்கு ஊர்வலம், இரவு சிறப்பு பூஜை, அம்பாள் சிம் வாகனத்தில் எழுந்தருளல், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பத்திரகாளியம்ன் கோயிலில் நேற்று காலை உடையார்பிள்ளையார் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் கொடைவிழா ஒன்றாம் மண்டகப்படிதார்கள் சார்பில் துவங்கியது. கோமரத்தார்களுக்கு தாலிக்கு வேலி டி.ஆர். பீம்சிங் ஆடைகள் வழங்கினார். பின்னர் விநாயகருக்கு கேரள செண்டை மேளம், நையாண்டி மேளம் மற்றும் கீழக்கடையம் கனில் குழுவினரின் கனில் ஆட்டத்துடன் பால்குடம் ஊர்வலம் நடந்தது. அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக மூலக்கோவில் அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தலும், வீதியுலாவும் நடந்தது.வரும் 7ம் தேதி இரு கோயில்களிலும் கொடைவிழாவும், அம்பாள் திருத்தேரில் எழுந்தருளலும் 14ம் தேதி 8ம் பூஜை வைபவமும் நடக்கிறது.