வடமதுரை;வடமதுரை பிலாத்தில் விநாயகர், காளியம்மன், நாகேஸ்வரி, வரதராஜபெருமாள், பிடாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் விழா துவங்கியது. இரண்டு கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சேர்வைகாரன்பட்டி மேலப்பெருமாள் கோயில் அர்ச்சகர் திருவேங்கடம், வரதராஜப் பெருமாள் கோயில் பூபதிசர்மா தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். நாயுடு மகாஜன சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊர் பிரமுகர் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் திருமலைச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் பங்கேற்றனர்.