பதிவு செய்த நாள்
01
செப்
2018
12:09
சென்னை : பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய பெருவிழாவில் நேற்று, இளையோர் விழா நடந்தது. பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 46ம் ஆண்டு பெருவிழா, ஆக., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று, இணையதளங்களில் இருந்து மீட்கும் ஆரோக்கிய தாய் எனும் தலைப்பில், இளையோர் விழா நடந்தது. இதை முன்னிட்டு, காலை, 5:30 மணி முதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் நடத்தப்பட்டன. மாலை, 5:30 மணிக்கு, போரூர் பங்குத் தந்தை அருள்ராஜின் தலைமையில், செபமாலை, நவ நாள் செபம், கூட்டுத் திருப்பலி ஆகியவை நடந்தன. இரவு, 8:00 மணிக்கு, இளைஞர்களுக்கான பல்சுவைப் போட்டிகள் நடந்தப்பட்டன. இதில், நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.