வாழ்வில் நம்மை பல கஷ்டங்கள் துரத்துகின்றன. மனப்பிரச்னை, பணப்பிரச்னை, குடும்பபிரச்னை என ஆளுக்கொரு பிரச்னையால் அவதிப்படுகிறோம். இந்த பிரச்னைகளைச் சுமப்பவர்கள் ஆண்டவரிடம் ஜெபித்தால் மனபாரம் குறையும். ’ஆண்டவரே... எங்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பும்! ஆனால் நீர் மாத்திரம் என்னோடு இரும். எவ்வளவு சுமையானாலும் அதை என் மீது சுமத்தும்! ஆனால் நீர் மாத்திரம் என்னைத் தாங்கிக் கொள்ளும். எனக்குள்ள எல்லா கட்டுகளையும் துண்டித்து விடும். ஆனால் என்னை மாத்திரம் உம்மோடு இணைத்துக் கொள்ளும்” என்று பிரார்த்தனை செய்யுங்கள்.