பதிவு செய்த நாள்
06
செப்
2018
03:09
பள்ளிப்பட்டு:விஜயராகவ பெருமாள் கோவிலில், புதிய கொடிமரம், இன்று (செப்., 6ல்) காலை, ஸ்தாபனம் செய்யப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜை துவங்கியது.
பள்ளிப்பட்டு அடுத்துள்ள விஜயராகவபுரம் கிராமத்தில், கொற்றலை ஆற்றங்கரையை யொட்டி, அமைந்துள்ளது விஜயவல்லி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில்.
இந்த கோவிலில் இருந்த பழைய கொடிமரத்திற்கு மாற்றாக, புதிய கொடிமரம், இன்று, (செப்., 6ல்) ஸ்தாபனம் செய்யப்படுகிறது.பக்தர்கள் பங்களிப்புடன் இதற்கான பணிகள், சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இன்று (செப்., 6ல்) காலை, 8:30 மணிக்கு, புதிய கொடி மரத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம்செய்யப்படுகிறது.
இதற்கான யாகசாலை பூஜை, நேற்று (செப்.,5ல்), மாலை, 5:00 மணிக்கு துவங்கியது.