அழகன்குளம் மகான் சேகு வருசை முகமது தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2018 12:09
அழகன்குளம்:அழகன்குளம் மகான் சேகு வருசை முகமது தர்கா கந்தூரி விழாவையொட்டி ஜமாத் தலைவர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
தர்காவில் ஆண்டுதோறும் தீன் கொடியேற்றப்பட்டு கந்தூரி விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு விழாவையொட்டி அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் லுக்மான் ஹக்கிம், செயலாளர் பசீர் அகமது, முஸ்லிம் பொதுஜன சங்க தலைவர் சகுபர் சாதிக், செயலாளர் செய்யது இபுராகிம், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சபை செயலாளர் பகுருல் அமீன் உள்ளிட்ட பல்வேறு பகுதி ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் ;மால்முகமது தீன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக அழகன்குளம் ஷூம்மா பள்ளிவாசல் இமாம் சிறப்பு துஆ ஓதினார். பல்வேறு பகுதி மக்கள் பங்கேற்றனர். செப்.,15ல் கந்தூரி விழா நடக்கிறது. ஏற்பாடுகளை தர்கா கமிட்டி ஜமால் முகமது, அப்துல்வகாப், சேக்நூர்தீன், சேக் சபியுல்லா,உபயதுல்லா, மவுசுதீன், ஜமீல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.