ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் மயில் வாகனத்தில் விநாயகர் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2018 12:09
உப்பூர்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா செப் .4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று (செப்.7ல்) மாலை வெயிலு கந்த விநயாகர் மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.