மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வரும் 9ம் தேதி மாசி மண்டல உற்சவத்திற்கான கொடியேற்றம் நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்துள்ளதாவது :கோவிலில் மாசி மண்டல உற்சவம் பிப்., 8 முதல் மார்ச் 17 வரை நடக்கிறது. பிப்., 9ல் காலை 10.35 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மார்ச் 17ல் மாசி மண்டல உற்சவம் கொடியிறக்கி, கணக்கு வாசித்தல் நடக்கிறது. பிப்., 27 முதல் மார்ச் 7 வரை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.உற்சவ நாட்களில் கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ, அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்க கவசம் சாத்துப்படி, உபய திருக்கல்யாணம், தங்கரதம் புறப்பாடு நடத்தப்பட மாட்டாது. இவ்வாறு ஜெயராமன் தெரிவித்துள்ளார்.