கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 7 நாட்கள் தெப்ப உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2012 11:02
நகரி: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஆண்டு தெப்ப உற்சவ விழா நேற்று துவங்கியது. வரும் 7ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை திருப்பதி தெப்ப திருக்குளத்தில் உற்சவ விழா சிறப்பாக நடைபெற உள்ளது. நேற்று மாலை 6.30 முதல், இரவு 8 மணி வரை, சுவாமி தெப்பக்குளத்தில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலை 6.30 முதல், இரவு 8 மணி வரை உற்சவ சேவை நடைபெறும். தெப்ப உற்சவத்தை ஒட்டி கோவிந்தராஜ சுவாமி கோவில், திருக்குளம் ஆகிய பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.