பதிவு செய்த நாள்
09
செப்
2018
03:09
மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, அக்., 3 வரை லட்சார்ச்சனை நடக்கிறது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோவிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி, குரு பகவானால் வழிபடப்பட்டவர்.இதனால், இக்கோவில் குரு தலமாக திகழ்கிறது. குரு பகவான் அக்., 4 இரவு, 10:05 மணிக்கு துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு, செப்., 7 முதல், அக்., 3 வரை லட்சார்ச்சனையும், அக்., 4ல் தருமபுர ஆதீனம் முன்னிலையில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடும் நடக்கிறது.பங்கேற்க விரும்புவோர் 99441 14842, 88258 63586 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.