குத்துக்கல்வலசை முத்துமாரியம்மன் கோயிலில் 10ம் தேதி பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2012 11:02
தென்காசி:குத்துக்கல்வலசை முத்துமாரியம்மன் கோயிலில் வரும் 10ம் தேதி பூக்குழி திருவிழா நடக்கிறது.தென்காசி அருகே குத்துக்கல்வலசை சக்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பூக்குழி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு பூக்குழி திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு 9ம் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் திருவிளக்கு பூஜை நடக்கிறது.பூக்குழி திருவிழா அன்று காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. துர்கா சூக்த ஹோமம், ஸ்ரீசூக்த ஹோமம், மகாலட்சுமி பூஜை, அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலையில் குற்றால தீர்த்தத்துடன் அக்னி சட்டி ஊர்வலம் மேளதாளம் முழங்க நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு மேல் வில்லிசை நிகழ்ச்சியும், நள்ளிரவில் அம்மன் அலங்காரத்துடன் சாம பூஜையும் நடக்கிறது.ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.