ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி சாரதா சங்கர மடத்தில் வரும் 5ம் தேதி முதலாமாண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது.ஆழ்வார்குறிச்சியில் ஸ்ரீஸ்ரீ ஸ்வாமி ப்ரஹ்மானந்த ஸரஸ்வதி கடந்த ஆண்டு ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயில் பின்புறம் மேலமாட வீதியில் விநாயகர், ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கரபகவத்பாதாச்சார்யாள், சாரதாம்பாள், சந்த்ரமவுலீஸ்வரர் ஆகியோர்களை நிர்மாணித்து கும்பாபிஷேகம் நடத்தினார்.இதன் வருஷாபிஷேகம் வரும் 5ம் தேதி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 6.30 மணிக்கு ருத்ர ஏகாதசி, வஸோதார ஹோமம், 8 மணிக்கு சண்டிகா ஹோமம், காலை 11.45 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்பாபிஷேகம், மங்கள ஆரத்தி, பிரசாதம் வினியோகம் ஆகிய வைபவங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஸத்ஸங்கம், 5.30 மணிக்கு பிரதோஷ பூஜை, இரவு 8 மணிக்கு மங்கள ஆரத்தி ஆகிய வைபவங்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சாரதா சங்கர மட ஸ்தாபக தலைவர் ஸ்ரீஸ்ரீ ஸ்வாமி ப்ரஹ்மானந்த ஸரஸ்வதி மற்றும் சாரதா சங்கர மடம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.