பதிவு செய்த நாள்
17
செப்
2018
11:09
ராஜபாளையம்:ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சுற்று வட்டாரப் பகுதிகளான சட்டிக்கிணறு, பூபால் பட்டி தெரு, சக்கராஜா கோட்டை, திருவனந்தபுரம் தெரு, தொட்டியபட்டி, தளவாய் புரம், இ.எஸ்.ஐ காலனி, சங்கரபாண்டியபுரம் உள்ளிட்ட 28 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நேற்று (செப்., 16ல்) மாலை 4:15 மணிக்கு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து அணி வகுத்து சென்றது. பழைய பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா, அம்பலபுளி பஜார், சங்கரன்கோவில் முக்கு வழியாக கருங்குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது.
முன்னதாக ஊர்வலத்திற்கு பா.ஜ., செயற்குழு சுகந்தம் ராமகிருஷ்ணன், ராஜபாளையம் இல்லத்து பிள்ளைமார் சங்க தலைவர் சிதம்பரம், நகர தலைவர் மகேஸ்வரன் தலைமை வகித்தனர். புதுச்சேரி மாநில ஹிந்து முன்னணி தலைவர் சனில்குமார் பேசினார். பொது செயலாளர் சஞ்சீவி, துணைத்தலைவர் முத்து மாணிக்கம் முன்னிலை வகித்தனர். இல்லத்து பிள்ளைமார் சங்க பொது செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். பா.ஜ., நகர செயலாளர் சந்திரன் நன்றி கூறினார். ஊர்வலத்தில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.ராஜபாளையம் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.